மிருகம் படத்தில் நடிக்க கொடுத்த கால்ஷீட் தேதியெல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் தேதி வேண்டுமானால் கூடுதல் சம்பளம் கொடுத்தால்தான் வருவேன் என்று இயக்குனரோடு மல்லுக்கட்டியிருக்கிறார் பத்மபிரியா.
மொத்தப்படமும் முடிகிற நிலையில் இன்னும் இரண்டுநாள் தேதி கேட்டதுக்குதான் பத்மபிரியா இப்படி சொல்லியிருக்கிறார்.
தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் புகார் கொடுத்தார். இரண்டு தரப்பையும் கூப்பிட்டு விசாரித்திருக்கிறார்கள். படப்பிடிப்புக்கு வந்த தேதிகளில் முக்கால்வாசி நாட்கள் ஸ்பாட்டுக்கு மூன்று மணி நேரம் தாமதமாகத்தான் வருவாராம்.
இதெல்லாம் கால்ஷீட் கணக்கில் எப்படி வைத்துக்கொள்ள முடியும் என்று கேட்க... பணம் வாங்காமல் நடித்துக்கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
வருகிற 16,17ம் தேதிகளில் நடித்துகொடுப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் பத்மபிரியா.