சித்திரம் பேசுதடி படத்துக்கு பிறகு பாவனா நடித்து ஐந்து படம் ரிலீஸாகியிருக்கிறது. கூடல்நகர், கிழக்கு கடற்கரைசாலை, தீபாவளி, வெயில், ஆர்யா இது எதுவுமே அவருக்கு பேர் சொல்லும் படமாக இல்லை.
நடுவில் பாலாவின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு தூக்கிவிட்டார்கள். பாவனா நடித்தாலே படத்துக்கு சிக்கல்தான் என்று கோடம்பாக்கம் முழுக்க பேச்சு கிளம்பியிருகிறது.
இதனாம் கலங்கிப்போன பாவனா... அடுத்து பெரிதும் எதிர்பார்ப்பது ராமேஸ்வரம் படத்தை. இந்தப் படம் நன்றாக ஓடவேண்டும் என்று கோவில் கோவிலாக போய் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.