அம்முவாகிய நான் படத்தில் பார்த்திபனோடு ரகளை பண்ணியவர் நடிகை பாரதி. பேருக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்பதுபோல் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.
இந்தப் படத்துக்கு முன்பே அவர் அறிமுகமான படம் ஆடாத ஆட்டமெல்லாம். கும்மாளம் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படம் அக்காவுக்கும் தம்பிக்குமான பாசத்தை சொல்கிற படம். இதுதான் பாரதிக்கு கிடைத்த முதல் படம்.
மொத்தப்படமும் முடிந்த நிலையில் கடந்தவாரம் விசாகப்பட்டணத்துக்கு போய் ஒரு பாடல் காட்சியை படமாக்கிவிட்டு திரும்பிருக்கிறார்கள். அம்முவை தூக்கி சாப்பிடுகிற மாதிரி ஏகத்துக்கும் தாராளம் காட்டி நடித்திருக்கிறார். புகைப்படங்களை பார்த்த வினியோகஸ்தர்கள் மத்தியில் படத்துக்கு திடீரென்று மவுசு கூடிவிட்டது.