கோவா திரைப்படவிழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசியவிருது கிடைத்திருக்கிறது.
டி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த ஆடும் கூத்து சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த தவமாய் தவமிருந்து படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசியவிருது கிடைத்திருக்கிறது.
இந்த படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன். ஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது தவமாய் தவமிருந்து படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.