வில் படத்தின் இயக்குனர் பிரபாகர். இவர் இந்த படத்தின் கதையை எஸ்.ஜே. சூர்யாவிடம் சொல்ல அவர் உடனே ஒப்புக் கொண்டாலும் தெலுங்கில் புலி படத்தை இயக்கிவிட்டு வந்து நடிக்கிறேன் என்றிருக்கிறார்.
அதற்கு முன் பிரபாகர், எஸ்.ஜே. சூர்யாவின் கெட்டப்பை கொஞ்சம் மாற்றி டிரெயிலர் ஷூட் பண்ணியிருக்கிறார். டிரெயிலரை பார்த்ததும் சூர்யா மற்றும் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ். சக்கரவர்த்தி மிரண்டு போயிருக்கிறார்கள்.
எஸ்.ஜே. சூர்யாவும் தான் இயக்கும் புலி படத்தை தள்ளிவைத்துவிட்டு முதலில் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.