எஸ்.ஜே.சூர்யாவை வைத்து கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணனின் அடுத்த படம் மச்சக்காரன். திருட்டுப்பயலே, நான் அவனில்லை என்று ஏடாகூடமான படங்களாக பார்த்து நடிக்கும் ஜீவன் தான் இதிலும் ஹீரோ.
வில்லங்கமான இந்த டீமை வளைத்துப்போட்டு அடுத்த படத்தை எடுக்க ப்ளான் பண்ணியிருக்கிறார் ஆழ்வார் படத்தை தயாரித்த மோகன் நடராஜன்.
மச்சக்காரன் படத்துக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பை பார்த்து மிகப்பெரிய தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருக்கிறார் தயாரிப்பாளர்.