தமிழ் பத்திரிக்கையாளர்கள் மீதும் தமிழ் சினிமாக்காரர்கள் மீதும் கடுங்கோபத்தில் இருக்கிறார் மீரா ஜாஸ்மின். வேண்டுமென்ற தன்னைப் பற்றிய தவறான வதந்திகளை பரப்புகிறார்கள் என்பதுதான் கோபத்திற்கு காரணம்.
தெலுங்கிலும், மலையாளத்திலும் மீராவுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. இப்போது நடித்துக் கொண்டிருக்கும் நேபாளி படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு கொஞ்ச நாளைக்கு தமிழ் பக்கம் தலைகாட்டாமல் தன் கோபத்தை வெளிப்படுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.
இப்படித்தான் நயன்தாராவும் சிம்பு பிரச்னையில் தமிழுக்கு டாட்டா காட்டிவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அப்புறம் வம்படியாக நயனை தமிழுக்கு இழுத்து வந்திருக்கிறார்கள். மீராவும் தமிழை ஒதுக்கும் முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறார்.