நடிகர் சங்க கலை நிகழ்ச்சிக்கு முன்னணி ஹீரோக்கள் எல்லாம் ஆளுக்கொரு காரணம் சொல்லி வரமறுக்கிறார்கள்.
நலிந்த கலைஞர்களின் நிதிக்காக சேர்க்கப்படும் இந்த கலை நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொள்ள மறுக்கிறார்கள். நடிகர் சங்க விதிமுறைகளை கடுமையாக்கினால்தான் இவர்கள் திருந்துவார்கள் என்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறாராம் சரத்குமார்.
துணை நடிகர்கள் எல்லாம் தாங்கள் வாங்கும் 100 ரூபாய் சம்பளத்தில் 10 ரூபாயை நடிகர் சங்கத்தில் கட்டி விடுகிறார்கள். பெரிய நடிகர்கள் கோடி கோடியாக வாங்கிக் கொண்டு சங்கம் பக்கமே திரும்பிக் கூட பார்பதில்லை.
இனிமேல் அவர்கள் எல்லாம் தங்கள் சம்பளத்தில் 5 சதவீதத்தை நடிகர் சங்கத்திற்கு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை கட்டாயபடுத்தினால்தான் சரிபட்டுவரும் என்று சரத்குமார் தரப்பில் பேசிக் கொள்கிறார்கள்.
இது தெரிந்த முன்னணி நடிகர்கள் அதையும் கொண்டு வரட்டும் பார்க்கலாம் என்று எதிர்கொள்ள தயாராகிவிட்டார்கள்.