கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் வாரணம் ஆயிரம். இந்த படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் நடந்திருக்கிறது. இதற்கிடையில் சூர்யா, ஹரி இயக்கத்தில் வேல் படத்தில் நடிக்கிறார்!
சூர்யா வேல் படத்தை முடித்துக் கொண்டு வருவதற்குள் தான் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை தயாரித்து இயக்கி விடலாம் என்று களம் இறங்கிவிட்டார் கௌதம் மேனன்.
இதை கேள்விபட்ட சூர்யா நீங்கள் அந்த படத்தை முடிக்க லேட்டாகுமே. நான் வேண்டுமானால் வேறொரு படத்தில் நடித்து விட்டு வரட்டுமா என்று கௌதமிடம் கேட்டிருக்கிறார். நீங்கள் வேல் படத்தை முடித்துக் கொண்டு வரும்போது நான் கண்டிப்பாக இந்த படத்தை முடித்துவிடுவேன் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் கௌதம்.
பிறகு சூர்யா சமாதானமாகி சரியென்றிருக்கிறார். கௌதம் மேனன் இயக்கும் படத்தில் புதுமுகங்கள் நடிக்கிறார்கள். படத்தை 45 நாளில் முடித்துவிடுவாராம்.