நடிகர் சங்க நிதிக்காக மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை நடத்த நடிகர் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.
இந்த நிகழ்ச்சிகளில் நட்சத்திரங்களை பங்கேற்க வைக்கும் பொருட்டு அவர்களை தொடர்பு கொண்டால் யாரும் லைனில் வருவதில்லையாம். அவர்களது மேனேஜர்களே ஃபோனை எடுத்து பிஸியாக இருக்கிறார்கள் என்று சொல்லிவிடுகிறார்களாம்.
இதனால் கடுப்பாகி போன நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மேனேஜர்களை கூப்பிட்டு டோஸ்விட்டிருக்கிறார்.
நடிகர் நடிகைகள் தங்களுக்கொரு பிரச்னை என்றால் உடனே சங்கத்தை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்த்து வைக்கச் சொல்கிறார்கள். ஆனால் ஒரு நடிகர் சங்க தலைவர் என்னாலே கூட சங்கம் தொடர்பாக அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இது என்ன நியாயம் என்று கொதித்துப் போகிறார் சரத்குமார். அதோடு சங்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் பின்வாங்கும் நட்சத்திரங்கள் மீது கடுமையான நிபந்தனையை விதிக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் நடிகர் சங்கம்.