ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கும் அறை எண் 305ல் கடவுள் படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம்-ல் இன்று முதல் தொடங்கி இருக்கிறது.
முதல் படத்தில் நகைச்சுவையை கையெலெடுத்த இயக்குனர் இப்படத்திலும் காமெடியையே கையாளப் போகிறார்.
பிரமாண்டமான செட்டில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. படத்திற்கென்று தனியாக பூஜை விழா வைக்காமல் படப்பிடிப்பில் எளிமையாக பூஜை போட்டு தொடங்கி இருக்கிறார்கள்.
கஞ்சா கருப்பு, சந்தானம் இடம்பெறும் பாடல்காட்சி படப்பிடிக்கப்பட்டது.