சென்சார் பிரச்னை இல்லாத படம் ராமேஸ்வரம்
ராமேஸ்வரம் படம் அகதியின் வாழ்க்கையை மையமாக கொண்டிருப்பதால் படத்திற்கு ஏதாவது சிக்கல் வரப்போகிறது என்று படத்தின் இயக்குனர் செல்வத்திடம் எல்லோரும் கேட்கிறார்களாம். அப்படி பிரச்னை வராது என்று சொல்கிறார் அழுத்த திருத்தமாக இயக்குனர். காரணம் படம் எடுப்பதற்கு முன்பே தணிக்கை குழு அதிகாரிகளிடம் ஸ்கிரிப்ட்டை கொடுத்து இதில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்கள் சர்டிபிகேட் கொடுத்த பிறகுதான் படத்தையே ஆரம்பித்திருக்கிறார் செல்வம். ஈழ தமிழர்களுக்கு வாழ்வியலே பிரச்னையாக இருக்கும் போது காதலின் நிலைமை எப்படி இருக்கும் என்பதைதான் உருக்கமாக சொல்லி இருக்கிறேன் என்கிறார் செல்வம்.