ஒரு கோடி ரூபாய் செட்டில் தயாராகும் பாடல்
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பட இயக்குனர் சிம்புதேவன் அடுத்து இயக்கும் படம் அறை 305ல் கடவுள். இப்படத்தில் கஞ்சா கருப்பு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்காக ஏவிஎம் ல் 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமான இந்திரலோகம் செட் அமைத்து கொண்டிருக்கிறார்கள். இந்திரலோகத்துக்கு சென்று கஞ்சா கருப்பு அழகிகளுடன் நடனம் ஆடுவதைப் போன்று காட்சி இருக்குமாம். இதற்காக மும்பையிலிருந்து பிரமாத அழகிகளை வரவழைத்து இப்பாடல் காட்சியை எடுக்கப் போகிறார்களாம். கஞ்சா கருப்பு யோகத்திற்கு அளவே இல்லை.