ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவா மரணம்
தமிழ் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஜீவா படப்பிடிப்பின்போது மாரடைப்பால் மரணமடைந்தார். தாம் தூம் படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றிருந்த ஜீவா, செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள நட்சத்திர விடுதி அறையில் தங்கியிருந்தார்.அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவர் வரவழைக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி 44 வயதான ஜீவா இன்று காலை உயிரிழந்தார்.அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டெர்லிங் சாலையில் வசித்து வந்த ஜீவாவிற்கு அனிஸ் என்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். ஜென்டில்மேன், காதலன், இந்தியன், வாலி, சினேகிதியே, உல்லாசம் உட்பட பல படங்களில் ஜீவா ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.12
பி, உள்ளம் கேட்குமே படங்களை இயக்கியுள்ளார். ஜீவா இயக்கிய உன்னாலே உன்னாலே திரைப்படம்ட தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.