த்ரிஷா நடிக்கும் வலுவான கதாபாத்திரம்
மொழி படத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த கதாபாத்திரம் போன்று தங்களுக்கும் கிடைக்காதா என்று முன்னணி நடிகைகள் ஏங்குவது உண்மை. ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷாவைத் தான் கேட்டார்கள். அப்போது கால்ஷீட் பிஸியாக இருந்ததால் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் த்ரிஷாவுக்கு இருந்தது இப்போது அதேபோன்று ஒரு வலுவான கதாபாத்திரம் த்ரிஷாவிற்கு கிடைத்திருக்கிறது. ராதாமோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் உருவாகும் அபி என்ற படத்தில் த்ரிஷா நடிக்கிறார். இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம். அப்பா பெண் உறவைச் சொல்லும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ் த்ரிஷாவின் அப்பாவாக நடிக்கிறார்.