வடிவேலு மீது புகார் சொல்லியிருக்கிறாரா இயக்குனர் ஹரி
"
வேல்" படத்தில் வடிவேலு கேரவேன் கேட்கிறார் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். கேரவேனுக்கு ஏற்பாடு பண்ணி கொடுத்துவிட்டார் இயக்குனர் ஹரி. ஷாட் முடிந்தவுடனே கேரவேனுக்கு உள்ளே போய் உட்கார்ந்து கொள்ளும் வடிவேலு, அடுத்த ஷாட்டுக்கு உடனடியாக கீழே இறங்கி வரமாட்டாராம். உதவி இயக்குனர்கள் கேரவேன் கதவுக்கு பக்கத்தில் காத்துக் கிடந்து அவரை அழைத்து வர வேண்டியதாக இருக்கிறதாம். இதுக்கு தான் கேரவேன் வேண்டாம் என்று சொன்னேன் என்று புலம்பித் தள்ளிய ஹரி, தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது வாய்மொழியாக புகார் கொடுத்திருக்கிறாராம்.