சூர்யா, வடிவேலுவை கடுப்படித்த இயக்குனர்
, சனி, 6 செப்டம்பர் 2008 (18:02 IST)
வேல் படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். இந்தப் படத்தில் வடிவேலுதான் வேண்டும் என்று இயக்குனரிடம் அடம்பிடித்து ஒப்பந்தம் செய்ய வைத்திருக்கிறார் சூர்யா. முந்தாநாள் காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. அங்கே கேரவேன் பயன்படுத்தும் வசதியில்லாததால் படப்பிடிப்பில் கேரவேன் கொண்டு செல்லவில்லை. ஆனால் வடிவேலு தனக்கு கேரவேன் கட்டாயம் வேண்டும் என்று இயக்குனரிடம் வம்பு பிடித்து படப்பிடிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.
கடுப்பான ஹரி புதிதாக வளர்ந்து வரும் வேறொரு காமெடி நடிகரை எளிமையாக இருக்கிறார் என்று பெருமையாகச் சொல்லி வடிவேலுவை மட்டம் தட்டி பேசியிருக்கிறார். அதேபோல் சூர்யாவிடமும் உங்களால்தான் வடிவேலுவை போட்டேன் இப்போது பிரச்னை பண்ணுகிறார் பாருங்கள் என்று அவரிடம் மூஞ்சியை காட்டியிருக்கிறார். இதனால் வடிவேலுவும் சூர்யாவும் அப்செட்டாக இருக்கிறார்களாம்.