சம்பளத்தை கூட்டி எஸ்கேப்பான நடிகை
, சனி, 6 செப்டம்பர் 2008 (18:02 IST)
ராஜ்கபூர் இயக்கும் வம்புச் சண்டை படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட பூமிகாவை கேட்டிருந்தார்கள். பூமிகாவும் நடனமாடுகிறேன் என்று சொல்லியிருந்தார். இடையில் அவர் தெலுங்கு, இந்தி படத்தில் பிஸியாகிவிட, வம்புச் சண்டை பாடலில் நடிப்பதை தவிர்க்க நினைத்தார். அதற்காக அவர் தன் சம்பளத்தை உயர்த்தி சொல்லி எஸ்கேப் ஆகிவிட நினைத்தார்.
அவர் சொன்ன 13 லட்ச ரூபாய் சம்பளத்தை கேட்டதும் பட்ஜெட்டில் பாதியை கேக்குறாங்கப்பா என்று சொல்லி வேறு ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்களாம் தயாரிப்பு தரப்பில்.