சுந்தர். சி நடிக்கும் ஆயுதம் செய்வோம்
பேரரசு படத்தை இயக்கிய உதயன் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கும் ஆயுதம் செய்வோம் படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் நடக்கிறது. மதுரையை பேக்ரவுண்டாக கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மதுரையில் நடக்க இருக்கிறது. கதாநயாகியாக தமிழ் எம்.ஏ படத்தில் நடிக்கும் அஞ்சலி நடிக்கிறார். பிரமிட் சாய்மீரா தயாரிப்பில் ஹெச்.முரளி தயாரிக்கிறார். கே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். ஆக்ஸன் மற்றும் காமெடி கலந்து இப்படத்தை கலக்கப் போகிறார்கள்.