வக்கில் நோட்டீஸ் அனுப்பிய ஷங்கர்
சிவாஜி படம் முடித்த திருப்தியில் குடும்பத்துடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கிறார் ஷங்கர். இதற்கிடையில் சிவாஜி படத்தில் ரஜினி மொட்டை போட்டிருக்கும் கெட்டப்பில் இருக்கும் ஃபோட்டோக்கள் பத்திரிக்கை மற்றும் இண்டர்நெட்டில் வெளியாகியது. இந்த கெட்டப்பை ரகசியமாக பாதுகாத்து வைத்திருந்தாராம் ஷங்கர். எப்படியோ பத்திரிக்கைகளுக்கு ஃபோட்டோ கிடைத்துவிட்டது. எப்படி எங்கள் அனுமதி இல்லாமல் படத்தை வெளியிடலாம் என்று படங்களை வெளியிட்ட பத்திரிக்கை மற்றும் இண்டர்நெட் அலுவலகங்களுக்கு ஷங்கர் சார்பில் வக்கில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறதாம்.