Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சீரியலில் சிம்ரன்?

Advertiesment
சீரியலில் சிம்ரன்?

Webdunia

Webdunia
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த சிம்ரன், குழந்தை பெற்ற பின் நடிக்க முன்வந்தார். ஆனால் தமிழ் சினிமாவில் வாய்ப்பு எதுவும் இல்லை. அப்படியே வந்தாலும் அக்கா, அண்ணி வேடங்களில் நடிப்பதற்கே வாய்ப்புகள் வந்தன.

இதனால் வெறுத்துப் போன சிம்ரன், விளம்பரப் படங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார். இனி மேலும் கதாநாயகி வாய்ப்பு வராது என்று நினைத்த சிம்ரன் இப்போது புதுயோசனையில் இருக்கிறாராம்.

தொலைக்காட்சி தொடரில் நடிக்கலாமா என்று தீவிரமாக சிந்தித்து, அதுபற்றி விசாரித்து வருகிறாராம். கூடிய சீக்கிரம் சிம்ரனை சின்னத்திரையில் பார்க்கலாம்.

ஒருகாலத்தில் தமிழ் திரைப்பட நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்து, கனவுக் கன்னியாக வலம் வந்த சிமரன், சுகன்யா, தேவ்யானி வரிசையில் டி.வி. தொடர்கள் மூலம் பெண்களின் இதயங்களைக் கவரப்போவது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil