பொறுமையாக இருக்கும் ஜீவன்
"
திருட்டு பயலே", "நான் அவனில்லை" ஆகிய 2 படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜீவனுக்கு மார்க்கெட் ஏறுமுகம்தான்.நிறைய இயக்குனர்கள் அவரை நடிக்க கேட்டு கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிதானமாக கதையைக் கேட்டு, இந்த கதாபாத்திரம் பேசப்படுமா என்று ஆயிரம் முறை யோசித்துதான் சரி சொல்கிறாராம்.அதே போல் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக நடிக்கக் கேட்டாலும் மறுத்து விடுகிறாராம். இந்த இடத்திற்கு வர எவ்வளவு போராடினேன் என்று எனக்குத்தான் தெரியும். இடையில் படவாய்ப்புகள் சரியாக அமையாமல் கஷ்டபட்டதை தன்னால் மறக்க முடியாது என்கிறார்.எனவே பொறுமையாகவே செயல்படுகிறார் ஜீவன். அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் மச்சக்காரன்.