நீண்ட நாள்களுக்குப்பின் கிடைத்த தயாரிப்பாளர்
வடிவேலு கதாநாயகனாக நடிக்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை தயாரிக்க ரொம்ப காலமாக தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருந்தார் அதன் இயக்குனர் தம்பி ராமையா.
இப்போது அவருக்கு தயாரிப்பாளர் கிடைத்துவிட்டார். செவன்த் சேனல் நாராயணன் படத்தை தயாரிக்கிறார். ஆர்தர் வில்சன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சபேஷ் முரளி இசையமைக்கிறார்கள். இந்தப் படத்தில் வடிவேலுவுக்கு மூன்று கெட்டப்பாம். அடுத்த மாதத்திலிருந்து ப்டப்பிடிப்பை தொடங்குகிறார்கள்.