அப்பாவாகப் போகிறார் அஜீத்
காதல் தம்பதிகளான அஜீத், ஷாலினி ஜோடி மிக சந்தோசமாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் துள்ளி விளையாடுவதற்கு அவர்கள் வீட்டிற்கு ஒரு குழந்தை வரப்போகிறது. ஏழு வருடங்களுக்கு முன்னால் அஜீத், ஷாலினி இருவருக்கும் திருமணம் நடந்தது.
இந்நிலையில் ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது குழந்தைக்கு தயாகப் போகிறார் ஷாலினி. அஜீத் பில்லா படத்தின் படப்பிடிப்பிற்காக மலேசியாவில் இருந்தார். மூன்று நாள்களுக்கு முன் சென்னை வந்து ஷாலினியை மருத்துவரிடம் காட்டிவிட்டு மீண்டும் மலேசியா சென்றுவிட்டார். அங்கிருந்தபடி தினமும் ஷாலினிடம் உடம்பை பார்த்துக் கொள்ளுமாறு ஃபோனில் சொல்கிறார்.