`தி.நகர்' படத்தில் கரணுக்கு சம்பள பாக்கியை கொடுக்காமல் இழுத்தடித்தார்கள். கரண், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தும் பலனில்லாமல் இருந்தது. இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது.
Webdunia
பணமில்லை படம் முடிந்ததும் மீதிப் பணத்தை செட்டில் செய்கிறேன் என்று சொன்ன தயாரிப்பாளர் உடனடியாக எங்கிருந்தோ பணத்தை புரட்டி கரண் கையில் கொடுத்து ஷுட்டிங் கிளம்புகள் என்று கிளப்பி இருக்கிறார். எல்லாம் `கருப்பசாமி குத்தகைதாரர்' படம் செய்யும் வேலை.
இந்தப் படம் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் விநியோகஸ்தர்கள் மத்தியில் கரணுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது. அதனால் அவர் படத்தை நல்ல விலை கொடுத்து வாங்க முன்வந்திருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
கரணுக்கு மார்க்கெட் இருக்கும்போதே படத்தை முடித்து வெளியிட்டு விடவேண்டும் என்றுதான் `தி.நகர்' படக்குழுவினர் கரணுக்கு பணத்தை செட்டில் செய்து படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார்கள்.