முழு நேரமும் சீரியலில் பிஸியாகிவிட்ட நடிகை தேவயானி விரைவில் ஒரு புது படம் தயாரிக்கவிருக்கிறார்.
படத்துக்கு பேர் "கேனயன்" தேவயானி படத்தை தயாரிப்பதோடு ஹீரோயினாகவும் நடிக்கிறார். அப்போ.. ஹீரோ? வேறு யாருமில்லை தேவயானியின் காதல் கணவர் ராஜகுமாரனே படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
தனக்கு நெருக்கமான ஹீரோக்கள் அத்தனை பேரிடமும் போய் கால்ஷீட் கேட்டுப் பார்த்துவிட்டார். யாரும் தேதி கொடுப்பதாக இல்லை.
கணவர் ராஜகுமாரனிடம் சொல்லி அவருக்கேத்த மாதிரி வேறொரு கதையை ரெடி பண்ணிவிட்டார்.
அதில் கணவன் மனைவி இரண்டு பேருமே தங்கள் திறமையை காட்டப் போகிறார்கள்.