ஒரு காலத்தில் சுஜாதாவின் சலவை குறிப்பையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது ஒரு வார இதழ்.
அதேபோல் இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி தும்மினாலும் செய்திதான். இப்போ சொல்லப் போவது தும்மல் செய்தி அல்ல! சிவாஜி படத்தின் பாடல்களை வருகிற ஏப்ரல் மாதம் 4ம் தேதி உலகம் முழுக்க ஒரே நாளில் வெளியிட தீர்மானித்திருக்கிறது ஏவி.எம்.பட நிறுவனம்.
அப்படியான நிலையில் படத்தின் பிரபலமான பாடல்கள் மூன்றை ஒரு இணைய தளத்தில் போட்டு ஊரெங்கும் பாடல்களை டவுன்லோட் செய்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படி!
உலகம் முழுக்க ஒரே நாளில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதற்காக எஃப் எம் எஸ் ஆட்களுக்கு முன்கூட்டியே ஒரு பிரதி அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதை யாரோ ஒரு பார்ட்டி சுட்டு.. ரிலீஸ் தேதிக்கு முன்பே இணையத்தில் ரவுண்டு கட்டி விட்டார்கள்.
உதித் நாராயண் பாடிய சகாரா பாடல்... அப்புறம் சங்கர் மகாதேவன் பிளாசி பாடிய ஒரு கோடி சன்லைட்... ஹரிகரன், சாதனா சர்கம் பாடிய வா...வா..சிவாஜி பாடல்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. நொந்து போய்விட்டது சிவாஜி டீம்!