"யாரடி நீ மோகினி" படத்தில் ஏன் நடிக்க ஒப்புக் கொண்டோம் என்று வருத்தப்படும் அளவிற்கு தனுஷ் தரப்பில் சிம்பு விவகாரத்தை பெரிதுபடுத்திவிட்டதாக நயன்தாரா நினைக்கிறார். தேவையே இல்லாமல் அவர்களாக படப்பிடிப்பில் செக்யூரிட்டி போட்டு பப்ளிசிட்டி தேடிக் கொண்டதாக நினைக்கிறார்.
தயாரிப்பு தரப்பில் தனக்கென்று சிறப்பு பாதுகாப்பெல்லாம் வேண்டாமென்று கறாராக சொல்லிவிட்டார். நான் யாரையும் பார்த்து பயப்படத் தேவையில்லை. என்னை வஞ்சம் தீர்க்கும் அளவிற்கு நான் யாருக்கும் கெடுதல் பண்ணவில்லை என்று கோபமாக சொல்லிவிட்டாராம். எப்போதும் போல் சாதாரணமாக படப்பிடிப்பின் இடைவேளையில் தனது உதவியாளர்களுடன் கேரவேனில் போய் ஓய்வு எடுக்கிறாராம்.
படத்தயாரிப்பு குழுவினர் கடந்த வாரம் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதில் கலந்து கொள்ள முடியாது. பத்திரிக்கையாளர்களுடன் பேசமாட்டேன் என்று நயன்தாரா சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் பத்திரிக்கையாளர் சந்திப்பை கேன்சல் செய்திருக்கிறார்கள்.