சினி பாப்கார்ன் - ஒயின் எடு கொண்டாடு
, வெள்ளி, 7 மார்ச் 2014 (13:53 IST)
ஒயின் எடு கொண்டாடு!ஓல்டு மங்க், வோட்கா என்று மதுபானங்களின் பெயர்களை குறிப்பிட்டிருப்பதாகச் சொல்லி ஒரு பாடலை தடை செய்துள்ளது சென்சார். டாஸ்மாக் காட்சியில்லாமல் தமிழ் சினிமா இல்லை என்ற நிலை கவலைக்குரியது. அதனை மாற்ற வேண்டிய பொறுப்பு திரையுலகினருக்கு உண்டு. அதே நேரம் தெருவுக்கு தெரு டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கும் நாட்டில் இதுபோன்று பாடல்களை தடை செய்வதால் எந்த பயனும் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
சமீபத்தில் வெளியான மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் பெண் மதுவருந்தும் காட்சியை வைத்திருந்தனர். மலையாள ஒரிஜினலில் ஹீரோயின் மது அருந்தும் காட்சி இருந்ததால் தமிழிலும் அதனை வைத்தனர். மலையாளப் படத்தில் அதற்கு விளக்கம் தந்திருந்தார் இயக்குனர். கேரளாவில் உள்ள கிறிஸ்தவ குடும்பங்களில் மது அருந்துவது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. அந்த கலாச்சாரத்திலிருந்து வந்தவள் நாயகி. கோட்டயம் கதாநாயகியின் குணங்களை அப்படியே பாளையங்கோட்டை பெண்ணுக்கு பொருத்த முடியுமா? இப்போது எல்லா தரப்பு பெண்களும் மது அருந்துகிறார்கள் என்றாலும் கோட்டயம் நாயகிக்கு இருந்த லாஜிக் பாளையங்கோட்டை பெண்ணுக்கு இல்லை.
சமீபத்தில் மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டார். மணமகன் மலையாள கிறிஸ்தவர். திருமணம் முடிந்ததும் எப்படி இருவரும் ஒயின் குடிக்கிறார்கள் பாருங்கள். இது தமிழ்நாட்டில் சாத்தியமா? மது அருந்தும் காட்சியை படத்தில் வைக்கும் முன் பலமுறை இயக்குனர்கள் யோசிப்பது அவசியம். மார்ச் 11 ரஜினி வீட்டில் விசேஷம்!