ஜில்லா மரண மாஸ் - ரசிகர்களின் பார்வை
Publish Date: Fri, 10 Jan 2014 (18:29 IST)
Updated Date: Fri, 10 Jan 2014 (18:27 IST)
ஜில்லா எந்த தடங்கலும் இன்றி உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது. எது நடந்தாலும் நாங்க இருக்கோமில்ல என்பது மாதிரி கட்அவுட், பேனர், போஸ்டர், பட்டாசு என்று அசத்திவிட்டனர் விஜய் ரசிகர்கள். தலைவாவில் சறுக்கிய விஜய்க்கு இரண்டு மூன்று லிட்டர் ரெட்புல் குடித்த எனர்ஜியை தந்திருக்கும் இந்த கொண்டாட்டங்கள்.
ஜில்லா, வீரம் இரண்டில் ஜில்லாவுக்குதான் அதிக திரையரங்குகள். தமிழகம், கேரளா, மலேசியா, துபாய் என அனைத்து இடங்களிலும் ஜில்லாவுக்கே முதல் பந்தி. கேரளாவில் மோகன்லாலே வெளியிட்டதால் படத்தின் ரீச் பன்மடங்கு என்கின்றன கேரளாவிலிருந்து வரும் தகவல்கள். முந்நூறுறை தொடும் திரையரங்குகளின் பெயர்களை வரிசையாக வெளியிட்டு ஜில்லாவுக்கு விளம்பரம் தந்திருக்கிறார்கள் கேரளாவில். படத்தின் கதை இதுதான்:
மதுரை ஜில்லாவை அடக்கி ஆளும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் விஜய். விஜய்யின் தந்தை மோகன்லாலின் விசுவாச ஊழியர். லாலை காப்பாற்றும் போராட்டத்தில் உயிர் இழந்ததால் அவரின் மகனான விஜய்யை சிறுவனாக இருக்கும் போதே தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.