அதிமுக ஒதுக்கிய தொகுதிகளை நிராகரித்த தேமுதிக !

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (16:47 IST)
விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தனித்துப் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் அக்கட்சி மீண்டும் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேசியது. ஆனால் இருகட்சிகளிடையே சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்

பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் உடல்நலக்குறைவுடன் இருந்தாலும் தன் கட்சிக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். எனவே, அக்கட்சிக்கு தேவையான தொகுதிகளை அதிமுக ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி இருப்பதாகத் தெரிகிறது. ஏற்கனமே பாமகவுக்கும் தேமுதிகவுக்கும் பொருந்திப்போகாத நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலைபோலவே இருகட்சிகளும் அதிமுககூட்டணியில் உள்ளது.

சமீபத்தில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கிட்டு செய்தது அதிமுக தலைமை. ஆனால் இன்னும் தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை.

இந்நிலையில், விஜயகாந்தின் தேமுதிக மற்றும்  அதிமுக கட்சிகள் மீண்டும் இன்று தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.
இதில் அதிமுக சுமார் 15 தொகுதிகளுடன் 1 எம்பி சீட்டும் ஒதுக்குவதாக கூறப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால் இதையேற்ற தேமுதிக மறுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments