கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் செல்கிறதா மதிமுக என்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்
திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மதிமுக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் இருப்பினும் இரு கட்சிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மதிமுகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே தருவதற்கு திமுக முன்வந்துள்ளதாகவும் இதனால் மதிமுக கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மூன்றாவது அணியில் மதிமுக இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து வைகோ விளக்கம் அளித்துள்ளார்
கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை என்றும் திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன் இது குறித்த தகவல்கள் முழுமையாக ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும் என்றும் வைகோ கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினருக்கு உரிய மரியாதை மற்றும் அங்கீகாரம் தரப்படுவதாக வைகோ தெரிவித்தார்