Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”என்னை மன்னித்து விடு கேன்” – மன்னிப்பு கேட்ட இங்கிலாந்து வீரர்

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (17:01 IST)
நேற்றைய உலக கோப்பை ஆட்டத்தில் தான் செய்த ஒற்றை தவறால் மொத்த ஆட்டத்தின் திசையும் மாறிபோனதாக கூறி நியூஸிலாந்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்.

நேற்று நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதிக்கொண்டன. இரண்டாவதாக இங்கிலாந்து பேட்டிங் செய்தது. 49வது ஓவரின் 4 வது பந்தை அடித்த ஸ்டோக்ஸ் ரன் ஓடினார். பவுண்டரி லைனுக்கு போன பந்தை குப்தில் தடுக்க போக, இரண்டாவது ரன்னுக்கு ஓடிவந்தார் ஸ்டோக்ஸ். அவரை வீழ்த்த நேராக ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார் குப்தில். எப்படியாவது ரீச்சை அடைந்து விட வேண்டுமென ஸ்டோக்ஸ் பாய, பறந்து வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு மீண்டும் பவுண்டரிக்கு சென்றது. இதனால் இங்கிலாந்து 6 ரன்கள் பெற்றது. அப்போதைய கட்டத்தில் 3 பந்துகளில் இங்கிலாந்து 9 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.

இந்த நிலையில் இந்த ரன் இங்கிலாந்தின் தலையெழுத்தை மாற்றியமைத்தது. இதுகுறித்து ஸ்டோக்ஸ் கூறும்போது “இந்த தவறை நினைத்து நான் பெரிதும் வருந்துகிறேன். இதற்காக வில்லியமசனிடம் நான் எனது வாழ்நாள் முழுவதும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

ஒருபக்கம் இந்த கூடுதல் 4 ரன்கள் செல்லுமா செல்லாதா என்பதான விவாதங்கள் நடந்து வந்தாலும், ஐசிசியின் விதிமுறைகள் படி அந்த 4 ரன்கள் செல்லும் என்பதால் இங்கிலாந்து கோப்பையை வென்றது. இதுபற்றி நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறும்போது “இது நடந்திருக்க கூடாது. ஆனால் இதற்கு யாரையும் குறை சொல்லவும் முடியாது. நியூஸிலாந்து அணிக்கு இது மிகப்பெரிய வலிதான்.” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments