Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் உயிரோடுதான் இருக்கிறேன்… பிரபல கிரிக்கெட் வீரர் இறந்ததாக பரவிய வதந்தி!

Advertiesment
நான் உயிரோடுதான் இருக்கிறேன்… பிரபல கிரிக்கெட் வீரர் இறந்ததாக பரவிய வதந்தி!
, வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (06:59 IST)
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனாக செயல்பட்டவர் ஹீத் ஸ்ட்ரீக். ஆல்ரவுண்டரான இவர் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறையிலும் வல்லவர்.

1993 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக அறிமுகமான இவர் 2005 ஆம் ஆண்டுவரை அந்த நாட்டு அணிக்காக விளையாடியுள்ளார். 189 ஒருநாள் போட்டிகள் மற்றும் 69 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள இவர் அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது 49 வயதாகும் இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்து விட்டதாக நேற்று சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. ஆனால் சிறிது நேரத்தில் அவரே “நான் உயிரோடுதான் இருக்கிறேன். புற்றுநோயில் இருந்து மீண்டு வருகிறேன்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைவெளி இன்றி நான் அடுத்த போட்டிக்கு தயாராகிறேன் - பிரக்ஞானந்தா