Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைவெளி இன்றி நான் அடுத்த போட்டிக்கு தயாராகிறேன் - பிரக்ஞானந்தா

Advertiesment
Rameshbabu Praggnanandhaa
, புதன், 23 ஆகஸ்ட் 2023 (19:23 IST)
இடைவெளி இன்றி நான் அடுத்த போட்டிக்கு தயாராகிறேன் என்று  பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.
 
10வது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் தற்போது நடந்து வருகிறது. நேற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நேற்று நடந்த இறுதி போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தின் 35வது நகர்தலுக்கு பிறகு முதல் சுற்று ட்ரா ஆன நிலையில், இன்று இரண்டாவது சுற்று நடைபெற்றது.

இப்போடியில்  உலக சாம்பியன் கார்ல்ஸ்னுடன் சம பலத்தில் பிரக்ஞானந்தா போராடி வரும் நிலையில் முதல் சுற்றைப் போலவே இரண்டாவது சுற்றும்  டிராவில் முடிந்தது.

எனவே நாளை டைபிரேக்கர் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கும் ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  'FIFE உலக கோப்பை சதுரங்க போட்டியில்,  டை பிரேக்கரில் பார்த்துக் கொள்ளலாம் என்று  கார்ல்சனும் நானும் போட்டியை டிராவில் முடித்துக் கொள்ள ஒப்புக்கொண்டோம் 'என்று  பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

இப்போட்டிக்குப் பின்னர் அவர் கூறியதாவது: எனக்கும் என்  வெற்றிக்கும் தூணாக என் தாயார் இருந்து வருகிறார்.  உலக  ரேபிட் டீம் செஸ் தொடர் உள்ளது. எனவே இடைவெளி இன்றி நான் அடுத்த போட்டிக்கு தயாராகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை செஸ் போட்டி.. இன்றும் டிரா ஆனால் என்ன நடக்கும்?