336 ரன்கள் சேர்த்தபின்னர் அவுட்டான திலக் வர்மா… டி 20 போட்டிகளில் புதிய சாதனை!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (07:23 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற திலக் வர்மா, அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்.

அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து டி 20 போட்டிகளில் கோலியின் இடத்தில் இறங்கி கோலி போலவே மிகச்சிறப்பாக ஆடிவருகிறார். சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக விளையாடி இந்திய அணியைக் கடைசி ஓவரில் வெற்றி பெறவைத்தார்.

டி 20 போட்டிகளில் கடந்த நான்கு இன்னிங்ஸ்களாக அவர் தனது விக்கெட்டை இழக்காமலேயே விளையாடி வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தன்னுடைய விக்கெட்டை 18 ரன்களில் இழந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 336 ரன்கள் சேர்த்தபின்னர் தன்னுடைய விக்கெட்டை அவர் இழந்துள்ளார். இது டி 20 போட்டிகளில் ஒரு வீரர் தொடர்ச்சியாக விக்கெட் இழக்காமல் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும். அவருக்கு அடுத்த இடத்தில் நியுசிலாந்தி மார்க் சாப்மன் 276 ரன்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா சம்பளம் ரூ.2 கோடி குறைக்கப்படுகிறதா? பிசிசிஐ முடிவுக்கு என்ன காரணம்?

நடுவரை விரட்டி விரட்டி அடித்த வீரர்கள்.. கலவர பூமியான பாகிஸ்தான் மைதானம்..

கிரிக்கெட்டை தவிர வேறு எதுவும் வேண்டாம்.. திருமண ரத்துக்கு பிறகு மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா..

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments