Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜ்கோட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி… வருண் சக்ரவர்த்தியின் அபார பந்துவீச்சு வீண்!

vinoth
புதன், 29 ஜனவரி 2025 (06:54 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான  5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளை இந்தியா வென்ற நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.  அந்த அணியின் பெக்கட் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் சிறப்பாக விளையாடி முறையே 51 மற்றும் 43 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் வருண் சக்ரவர்த்தி மிகச்சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆனால் இதன் பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே சீராக விக்கெட்களை இழந்து தடுமாறத் தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா மட்டும் நிலைத்து நின்று அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில்  9 விக்கெட்களை இழந்து 145 ரன்கள் மட்டுமே சேர்த்து 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டி20 போட்டி.. டாஸ் மற்றும் அணி வீரர்களின் விவரங்கள்..!

Greatest Of All Time.. ஐசிசியின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற ஜாஸ்ப்ரிட் பும்ரா!

சூப்பர் 6 சுற்றில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி.. த்ரிஷா சூப்பர் சதம்..!

தோனியைப் போல விளையாடுகிறார் திலக் வர்மா… பாராட்டிய முன்னாள் வீரர்!

இதுவரை எந்த இந்தியரும் படைக்காத இமாலய சாதனையைப் படைக்க காத்திருக்கும் அர்ஷ்தீப்!

அடுத்த கட்டுரையில்
Show comments