Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டி-20 பயிற்சி போட்டி கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி!

Advertiesment
டி-20 பயிற்சி போட்டி கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வி!
, வியாழன், 13 அக்டோபர் 2022 (22:40 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரால இந்திய அணி விளையாடிய  டி20 பயிற்சி போட்டியில் தோல்வியடைந்தது.

டி-20 உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் விளையாட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அங்கு சென்றுள்ள நிலையில்,  பெர்த் நகரில் பயிற்சி போட்டியில் பங்கேற்றது.

முதல் பயிச்சிபோட்டியில் வென்ற இந்திய அணி இன்று 2 வது பயிற்சிப் போட்டியில் பங்கேற்றது. இதில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் விளையாடவில்லை. ரோகித் சர்மா பேட்டிங் செய்யவில்லை.

கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ்  வென்று முதலில் பந்து வீசியது.  முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 268 ரன்கள் எடுத்தது. எனவே, 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற  நிலையில் களமிறங்கிய  இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி : திரையரங்குகளில் நேரடி ஒளிபரப்பு