எது பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கா?... சிஎஸ்கே பயிற்சியாளர் சொன்ன கருத்து!

vinoth
புதன், 9 ஏப்ரல் 2025 (14:30 IST)
இந்த சீசனில் ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வந்த சென்னை மற்றும் மும்பை அணிகள் அடுத்தடுத்து போட்டிகளில் தோற்று புள்ளிப் பட்டியலில் அதலபாதாளத்தில் உள்ளன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடித் தோல்வி அடைந்தது.

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும். முதல் போட்டியை வெற்றிகரமாக முடித்த சிஎஸ்கே அதன் பின்னர் நான்கு தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி நிர்னயித்த 220 ரன்கள் இலக்கைத் துரத்திய சி எஸ் கே அணி 201 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இது சென்னை அணிக்கு தொடர்ச்சியாக நான்காவது தோல்வியாகும்.

இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ள கருத்து சென்னை அணி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் “எங்கள் அணியின் பேட்டிங் முன்னேறியுள்ளது. இந்த போட்டியை நாங்கள் ஃபீல்டிங்கில் செய்த சொதப்பல்களால்தான் தோற்றோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments