அஷ்வினைத் தவிர யாரும் இப்படி என்னை மடக்கியதில்லை – ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்!

Webdunia
புதன், 30 டிசம்பர் 2020 (11:24 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அஷ்வினின் பவுலிங் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.

இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பிளேயர் என்றால் அது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தான். 60 ரன்களுக்கு மேல் சராசரி வைத்திருக்கும் அவரை நவீன கால டெஸ்டின் பிராட்மேன் என வர்ணிக்கின்றனர் விமர்சகர்கள். ஆனால் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார். அதுவும் அஷ்வின் பந்தில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார்.

இது குறித்து பேசியுள்ள ஸ்மித் ‘நான் சுழல்பந்தை ஆக்ரோஷமாக விளையாடுவேன். எனது ஆட்டத்தின் மூலம் அஷ்வினுக்கு அழுத்தம் கொடுக்க விரும்பினேன். ஆனால் அதற்கு எதிராக நடந்துள்ளது. இரு முனைகளைக் கொண்ட கத்தியை போன்ற சவால் இது. என்னால் மீண்டும் திரும்ப முடியும் என நினைக்கிறேன். அஷ்வினை தவிர எந்தவொரு பவுலரும் இப்படி என்னை நிலைதடுமாற வைத்ததில்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

T20 உலக கோப்பை கிரிக்கெட்!.. இன்று மோதும் 3 அணிகள்!..

இம்ரான்கானுக்காகக் குரல் கொடுத்த கபில்தேவ், கவாஸ்கர்: பாகிஸ்தான் அரசுக்கு உருக்கமான வேண்டுகோள்!

இன்று நடைபெறும் ஜிம்பாவே -அயர்லாந்து போட்டி இந்தியாவுக்கு முக்கியமானதா? சேப்பாக்கம் ரசிகர்களுக்கு ஜாக்பாட்

ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இலங்கை: இலங்கையின் வெற்றிக்கு இந்தியா காரணமா? இது என்ன புதுசா இருக்குது..!

ஆஸ்திரேலியாவிற்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை: டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறுமா ஆஸ்திரேலியா?

அடுத்த கட்டுரையில்
Show comments