Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உருமாற்ற கொரோனாவையும் இது கட்டுப்படுத்தும்?! – கோவெக்சினுக்கு அனுமதி கோரும் நிறுவனம்!

Advertiesment
உருமாற்ற கொரோனாவையும் இது கட்டுப்படுத்தும்?! – கோவெக்சினுக்கு அனுமதி கோரும் நிறுவனம்!
, புதன், 30 டிசம்பர் 2020 (10:29 IST)
பிரிட்டனில் பரவ தொடங்கியுள்ள உருமாறிய கொரோனா தாக்கம் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய கொரோனாவையும் கோவெக்சின் தடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கும் வர தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு புதிய உருமாறிய கொரோனா பரவ தொடங்கியுள்ளதால் மேலும் பரபரப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 20 பேருக்கு உருமாற்ற கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனாவுக்கு இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவையும் கட்டுப்படுத்தும் என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாவது கட்ட சோதனையில் உள்ள இந்த தடுப்பூசியை அவசட பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசரப்பட்ட அதிமுக... ஆதங்கத்தில் கூட்டணி கட்சிகள்!!