Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலிக்கு இந்தியாவில் விளையாடும் பேராசை இருக்கிறது…ஆனால்?- சோயிப் அக்தர் கருத்து!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (11:27 IST)
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டது.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் ஐசிசிக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் பணபலம் மிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஐசிசியைத் தன்பக்கம் சாய்த்தது. இதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டத்தை தவிர்க்க தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் பரிந்துரைத்த ஹைபிரிட் மாடலுக்கு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் பாகிஸ்தானில் வந்து விளையாடும் பேராசை இருக்கிறது. அவர்கள் மட்டும் இங்கு வந்து  விளையாண்டால் தொலைக்காட்சி உரிமம் எல்லாம் கோடிகளில் புரளும். ஆனால் இந்திய அரசுதான், அவர்கள் அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுக்கிறது” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக இறங்கவுள்ளாரா ரோஹித் ஷர்மா… வலைப்பயிற்சியில் நடந்த மாற்றம்!

சவுதி அரேபியாவில் உலகக்கோப்பை FIFA கால்பந்து போட்டி! - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பும்ரா மிகக் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார்… சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

இணையத்தில் அதிகம் தேடப்பட்ட போட்டிகளின் வரிசையில் RCB vs CSK போட்டி!

நாம் பார்த்த சிறந்த வீரர்களில் கோலி ஒருவர்… மனம் திறந்து பாராட்டிய கபில் தேவ்!

அடுத்த கட்டுரையில்
Show comments