Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ஸ்மேன்களைக் குறை சொன்னதால் நீக்கப்பட்டாரா ஹேசில்வுட்.. கவாஸ்கர் கருத்துக்கு ஆஸி முன்னாள் வீரர் பதில்!

vinoth
வியாழன், 5 டிசம்பர் 2024 (09:55 IST)
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.

முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்ற பிறகு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் பேட்ஸ்மேன்களின் செயல்பாட்டை விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில் அவர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆனால் இது அவரின் விமர்சனத்துக்கான தண்டனை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து பேசியுள்ள கவாஸ்கரும் அரசியல் காரணமாகவே ஹேசில்வுட் நீக்கப்பட்டார் என்று கூறியுள்ளார்.

ஆனால் கவாஸ்கரின் இந்த கருத்து குப்பையானது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ் கூறியுள்ளார். மேலும் ‘அப்படி வேண்டுமானால் இந்திய கிரிக்கெட்டில் நடக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அரசியலுக்கு அப்பாற்பட்டது.’ எனக் கூறியுள்ளார். இதனால் இந்த விவகாரம் இப்போது சூடு பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காதலிக்கு திருமணப் பரிசாக ரொனால்டோ அளித்த மோதிரத்தின் விலை இத்தனைக் கோடியா?

ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது?

சிஎஸ்கே அணியிடம் இருந்து ‘அதை’தான் கேட்டுள்ளேன்… அஸ்வின் விளக்கம்!

100 கோடி நஷ்டஈடு வழக்கு! நீதிமன்றம் வர மறுத்த தோனி! - என்ன காரணம்?

மாநில டி 20 லீக்கில் இருந்து தடை செய்யப்பட்ட யாஷ் தயாள்!

அடுத்த கட்டுரையில்
Show comments