இந்திய அணியின் பலவீனம் குறித்து ஆஸி அணியின் ஷேன் வாட்சன் கூறியுள்ள கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
உலகக்கோப்பைக்காக அணிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்களின் அணிகளின் செயல்பாடு மற்றும் கோப்பையை வெல்லும் வாய்ப்பு ஆகியவை பற்றி கணித்து கூறி வருகின்றனர். இதில் அதிகமும் பேசப்படுவது இந்திய அணி பற்றிதான்.
இந்திய அணி குறித்து ஆஸி அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் இந்திய அணியில் பேட்டிங் கூட்டணி பலமாக உள்ளது. அதுபோல சஹால் மற்றும அக்ஸர் போன்ற திறமையான சுழல்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது இந்திய அணியின் பவுலிங் பலவீனமாகவே உள்ளது. இறுதி ஓவர்களை இப்போதுள்ள பவுலர்கள் திறமையாக கையாளுவார்கள் என்ற நம்பிக்கை இல்லை எனக் கூறியுள்ளார்.
பலரும் இந்திய அணியின் பவுலிங் பூம்ரா இல்லாமல் பலவீனமடைந்துள்ளதாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.