ஒரு நாள் போட்டிகளில் அதிவேக 200 விக்கெட்கள்… ஷமி படைத்த புதிய சாதனை!

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (07:57 IST)
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக முழங்கால் காயத்தினால் அவதிப்பட்டு வந்த ஷமி சமீபத்தில் இந்திய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் சிறப்பாக பங்களிப்பு செய்த அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின்  முதல் போட்டியிலேயே பங்களாதேஷ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து அவர் ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். அவரின் சிறப்பான பந்துவீச்சால் பங்களாதேஷை குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது.

இந்த போட்டியில் ஷமி ஒரு நாள் போட்டிகளில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். மேலும் உலகிலேயே அதிவேகமாக 200 விக்கெட்கள் வீழ்த்திய இரண்டாவது பவுலர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் 104 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். முதலிடத்தில் இருக்கும் மிட்செல் ஸ்டார்க் 102 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - தென்னாப்பிரிக்கா 4வது டி20: சுப்மன் கில் வெளியே? அணியில் 3 மாற்றங்கள் நிகழ வாய்ப்பு!

அவசரமாக எல்லோரும் ரத்த தானம் செய்யுங்கள்: ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் உருக்கம்!

ஐபிஎல் 2026 ஏலம்: நட்சத்திரமாக ஜொலிக்கப் போகும் 6 இந்திய உள்ளூர் வீரர்கள்!

கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் உலக சாதனை.. அபிஷேக் ஷர்மா அசத்தல்..!

மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி..தொடரையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments