Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூங்கியெழுந்து வருவதற்குள் Timed out கொடுத்தால் எப்படி?... பாகிஸ்தான் வீரரைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

vinoth
வெள்ளி, 7 மார்ச் 2025 (09:21 IST)
சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி தொடர் ஆரம்பிக்கப்பட்ட நான்காவது நாளிலேயே தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. அந்த அணி நியுசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோற்றதாலும், அதன் பின்னர் நடந்த நியுசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியுசிலாந்து வெற்றி பெற்றதாலும் அந்த அணியின் அடுத்த சுற்றுக் கனவு சுக்கு நூறானது.

இதனால் அந்த அணி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு அணிக்குள் இருக்கும் குறுங்குழுவாதமே காரணமென்று சொல்லப்படுகிறது. அதே போல பாகிஸ்தான் வீரர் உடல் தகுதியிலும் அதிக கவனம் செலுத்துவதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில்தான் உள்ளூர் தொடர் ஒன்றில் பாகிஸ்தான் வீரர் சவூத் சகீல் களத்தில் ஆடிய வீரர் அவுட் ஆனதும் 3 நிமிடத்துக்குள் வராததால் டைம்ட் அவுட் முறையில் விக்கெட் கொடுக்கப்பட்டுள்ளார். இது பற்றி வெளியாகியுள்ள தகவலில் அவர்  தூங்கிவிட்டதாகவும், விக்கெட் விழுந்ததும் எழுந்து வருவதற்குத் தாமதம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைவைத்து பாகிஸ்தான் அணியை கிரிக்கெட் பார்வையாளர்கள் சமூகவலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூங்கியெழுந்து வருவதற்குள் Timed out கொடுத்தால் எப்படி?... பாகிஸ்தான் வீரரைக் கலாய்க்கும் ரசிகர்கள்!

வருண் சக்ரவர்த்திக்குப் பதில் வருண் தவானுக்கு வாழ்த்து… எக்ஸ் தளத்தில் நடந்த குழப்பம்!

குடும்பத்தை அழைச்சிட்டு வரக் கூடாது.. ஸ்லீவ்லெஸ் போடக் கூடாது! - ஐபிஎல் வீரர்களுக்கு கடுமையான விதிமுறைகள்?

இதனால்தான் விராட் கோலி அபூர்வம்.. பாராட்டித் தள்ளிய ரிக்கி பாண்டிங்!

ஒரே பிட்ச்சில் விளையாடுவது சாதகமான அம்சம்தான்… கம்பீர் கருத்துக்கு எதிராக பேசிய ஷமி!

அடுத்த கட்டுரையில்
Show comments