Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடுத்த வாய்ப்புகளில் எல்லாம் சொதப்பல்… அடுத்த தினேஷ் கார்த்திக் ஆகிறாரா சஞ்சு சாம்சன்?

vinoth
புதன், 31 ஜூலை 2024 (07:43 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் சில போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். ஆனால் தொடர்ச்சியாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இந்நிலையில் உலகக் கோப்பை முடிந்ததும் நடக்கும் இலங்கை அணிக்கெதிரான டி 20 தொடரில் அவர் பெயர் இடம்பெற்றது. முதல் போட்டியில் அவருக்கு வாய்ப்பளிக்கப் படாத நிலையில் இரண்டாவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்டார். ஆனால் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது போட்டியிலும் நான்கு பந்துகளை சந்தித்து டக் அவ்ட் ஆனார். அணியில் இடம் கிடைக்க போராடும் அவர் இப்படி கிடைக்கும் வாய்ப்புகளை வீணாக்கலாமா என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தினேஷ் கார்த்திக்கும் இதுபோலதான் அணியில் இடம் கிடைக்கும் போதெல்லாம் சொதப்பி தன்னிடத்தை தாரைவார்த்து சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு choker ஆக இருந்தார். அதே போன்ற ஒரு நிலைதான் சஞ்சு சாம்சனுக்கும் இருக்கிறது என கருத்துகள் வெளியாக தொடங்கியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி செய்யும் தவறு இதுதான்… முக்கியமான விஷயத்தை சுட்டிக் காட்டிய அசாரூதின்!

பும்ரா எங்களுக்கு அதிகமாக வேலை வைக்கிறார்… ஆஸி கேப்டன் பாராட்டு!

கோலி, ரோஹித் ஷர்மா எப்போது ஓய்வு?... ரவி சாஸ்திரி கருத்து!

கிங் இறந்துவிட்டார்.. புதிய கிங் பொறுப்பேற்றுக் கொண்டார் – கோலி குறித்து தடாலடி கருத்தை சொன்ன முன்னாள் வீரர்!

ஒரு ஆண்டில் அதிக டெஸ்ட் ரன்கள்… சச்சின், கவாஸ்கர் வரிசையில் இணைந்த ஜெய்ஸ்வால்!

அடுத்த கட்டுரையில்
Show comments