இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

vinoth
புதன், 23 ஜூலை 2025 (09:14 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. நான்காவது போட்டி இன்று மான்செஸ்டரில் நடக்கவுள்ளது.

கடந்த போட்டியின் போது கீப்பிங் செய்யும் போது கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டிக்கான அணியில் இடம்பெறும் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கல் எழுந்ததாக தகவல் வெளியாகின. இது குறித்து ஆலோசித்து வருவதாக துணைப் பயிற்சியாளர் ரியான் டெண்டோஷட் தெரிவித்திருந்தார்.

ஆனால் இப்போது வெளியாகியுள்ள கடைசி கட்ட தகவலின் படி “இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட்டே கீப்பிங் செய்வார்” என்று சொல்லப்படுகிறது. அவருக்கு காயம் குணமடைந்துள்ளதாகவும், விரல்களில் வலி இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தை அடுத்து பாகிஸ்தானும் புறக்கணிக்கிறதா? தாராளமா புறக்கணிச்சுக்கோ.. இந்தியாவுக்கு ஒரு நஷ்டமும் இல்லை..!

ஐசிசி உலகக்கோப்பை டி20 போட்டியில் வங்கதேசம் இல்லை: அதிரடி முடிவு..!

திடீரென விலகிய பாபர் ஆசம். இந்த மூன்று காரணங்கள் தான்..!

வங்கதேசத்திற்கு 24 மணி நேரம் கெடு கொடுத்த அமித்ஷா மகன்.. ஆடிபோன வங்கதேச கிரிக்கெட் வாரியம்

ஐபிஎல் போட்டிகளில் AI போர்.. ரூ.270 கோடிக்கு புதிய ஒப்பந்தம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments