Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

vinoth
புதன், 23 ஜூலை 2025 (09:02 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ‘ஆண்டர்சன் –டெண்டுல்கர்’ தொடரில் மூன்று போட்டிகள் முடிந்துள்ளன. இதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்றுள்ளது. அடுத்த போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ரஃபோட் மைதானத்தில்  இன்று நடக்கவுள்ளது.

இந்த போட்டிக்காக இரு அணிகளும் தயாராகி வரும் நிலையில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் இந்த போட்டியில் மிக முக்கியமான மைல்கல் ஒன்றை எட்டும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் அதிக ரன்கள் சேர்த்துள்ள வீரராக உள்ள ஜோ ரூட் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் சேர்த்த வீரராக உள்ளார்.

இந்நிலையில் இந்த போட்டியில் அவர் 120 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் சேர்த்த இரண்டாவது வீரர் என்ற மைல்கல் சாதனையை அவர் படைப்பார். அப்படி நிகழும் பட்சத்தில் அவர் பாண்டிங், காலிஸ், ராகுல் டிராவிட் ஆகியோரை முந்தி சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்தைப் பிடிப்பார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றைய போட்டியில் பண்ட் கீப்பிங் செய்வாரா?.. வெளியான தகவல்!

மீண்டும் ஒரு மைல்கல் சாதனை… மான்செஸ்டர் டெஸ்ட்டில் ஜோ ரூட் அற்புதம் நிகழ்த்துவாரா?

அப்பா பந்துவீச, மகன் சிக்ஸர் அடிக்க… ஆஹா அற்புத தருணம்…!

கடைசி போட்டியில் விளையாடும் ரஸ்ஸல்… வீரர்கள் கொடுத்த ‘Guard of Honor’ கௌரவம்!

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி… விளையாடும் 11 வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments