Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ரிஷப் பண்ட்டின் கையில்தான் ஆட்டத்தின் அச்சாணி இருக்கும்.. முன்னாள் வீரர் பாராட்டு!

vinoth
செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (07:17 IST)
இந்தியா - வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் முன்னனி பேட்ஸ்மேன்கள் எதிர்பாராத விதமாக விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியபோது பேட்டிங்கில் சதமடித்தும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்களைக் கைப்பற்றியும்  அசத்தினார்.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் சதமடித்தார். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடாமல் கம்பேக் கொடுத்த பண்ட், தனது முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்தியுள்ளார்.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் ஆட்டம் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா “ரிஷப் பண்ட் தன்னுடைய முதல் போட்டியிலேயே கம்பேக் கொடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அணியினரும் ரிஷப் பண்ட்டைக் கண்டு அஞ்சுவார்கள். களமிறங்கிய சில நிமிடங்களிலேயே அவரது விக்கெட்டை எடுக்க வேண்டும், இல்லையென்றால் அவர் அனைவரையும் ஓடவிடுவார். ரிஷப் பண்ட் ப்ளேயிங் லெவனில் இருக்கும்போது ஆட்டத்தின் அச்சாணி அவர் கையில்தான் இருக்கும்’ எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் இருந்து முழுவதும் விலகுகிறாரா ஹேசில்வுட்?

ஃபாலோ ஆனைத் தவிர்த்ததைக் கொண்டாடிய கம்பீரும் ரோஹித்தும்… என்ன கொடும சார் இது?

ஃபாலோ ஆனை தவிர்த்தது இந்திய அணி.. 10 விக்கெட்டில் அசத்தும் பும்ரா-ஆகாஷ் தீப்

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

அடுத்த கட்டுரையில்
Show comments